ISBN
978-93-6163-066-8
Publisher
Shanlax Publications

ISBN
978-93-6163-066-8
Publisher
Shanlax Publications
Pages
52
Year
2026
Book Format
Soft Binding
Language
English
Size
A5
Category
Literature
₹250 Original price was: ₹250.₹100Current price is: ₹100.
கடவுளைப் பற்றி உலகம் முழுவதும் எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பலர் கடவுளை தத்துவங்களிலும்இ வேதங்களிலும் தேடினர்; சிலர் கோயில்களிலும்இ பள்ளிவாசல்களிலும்இ தேவாலயங்களிலும்தங்களின் பிரார்த்தனைகளின்வாயிலாக தேடினர், மேலும்சிலர்யோகத்திலும்தியானத்திலும் தேடினர். நானும் கடவுளைத் தேடினேன். ஆனால் என் தேடல் நூலகங்களில் தொடங்கவில்லை. அது வாழ்க்கையில் தொடங்கியது. எதுவுமில்லாமல் இந்த உலகிற்கு வந்த எனக்கு எழுதும் வரம் கிடைத்தபோதும்இ மொழி தெரியாத இடங்களில் அந்நியமனிதர்கள் காட்டிய கருணையிலும்இ இயற்கையின் அமைதியிலும்இ மனிதர்களின் அன்பிலும்இ நன்றியுணர்விலும், கண்ணீரிலும், எதிர்பார்ப்பில்லாத உதவிகளிலும்இ கடவுளின் தேடல் தொடங்கியது.இந்த நூலில் உள்ள கவிதைகள் கடவுளை வரையறுக்க எழுதப்பட்டவை அல்ல. நான் வாழ்க்கையின் பல தருணங்களில் கடவுளைதேடிய அனுபவங்களைப் பதிவு செய்யும் முயற்சிதான் இவை. இந்தக் கவிதைகள் ஒரு கவிஞனின் அறிவிப்புகள் அல்ல; ஒரு சாதாரண மனிதனின் ஆச்சரியங்கள். நான் கண்டதைஇ நான் உணர்ந்ததைஇ நான் வியந்ததை வார்த்தைகளாக மாற்றியிருக்கிறேன். இந்தப் பக்கங்களை வாசிக்கும் போதுஇ நான் தேடிய கடவுளை நீங்கள் தேட வேண்டிய அவசியமில்லை. ஆனால் உங்கள் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு தருணத்தில்இ ஏதோ ஒரு மனிதரின் கருணையில்இ ஒரு புன்னகையில்இ ஒரு நன்றியுணர்வில்இ அல்லது ஒரு மௌனத்தில் நீங்கள் தேடி உணர்ந்த அந்த விளக்கை மீண்டும் நினைவுகூர்ந்தால்இ இந்த நூலின் நோக்கம் நிறைவேறியதாக நான் கருதுவேன்.
© Shanlax
Reviews
There are no reviews yet.